Friday, April 26, 2013

Padithathil Pidithathu !!

உலகையே காட்டும் கணினி அருகில்
இது தான் உலகம் என்று காட்டிய அம்மாவும், அப்பாவும் தொலைவில்!!

பண்டிகை நாள் மறந்து போனது
வீட்டிற்கு செல்லும் நாள் எல்லாம் திருவிழா ஆனது!!

வீட்டுச் சாப்பாடு விருந்துச் சாப்பாடு ஆனது
Cubicle கிளியாய் வாழ்க்கை ஆனது!!

ஒன்றும் பூஜ்யமும் தெரிந்த கணினி முன்பு
ஒன்றும் தெரியாத பூஜ்யமாய் நின்றேன்!!

விடிய விடிய வேலை செய்தேன்
 
தொலைத்தது  தூக்கத்தை மட்டுமல்ல
என் கனவுகளையும் தான்

என் கனவுகளை எல்லாம் கணினி
"Zip Folder" செய்து
"Shift+Delete" செய்தது!!

ப்ளாக்போர்டில் கற்ற தமிழ்
KeyBoard ஆல் மறந்து போனது!!

வாழ்கையின் தேடல் குறைந்து போனது
Google'ல் தேடல் அதிகம் ஆனது!!!

ஒவ்வொரு முறை வீட்டை விட்டு செல்லும் போதும்
முகம் பார்த்து விடை தரும் அம்மாவும்
முகம் பார்க்காமல் விடை தரும் அப்பாவும்
தருகின்ற வலிகள்
கவிதையிலும் நிரப்ப முடியாதது!!!

இது என்னுடைய மனநிலை மட்டும் அல்ல
இது விளக்க முடியாத பலரின் தன்னிலை
இதற்கு விடை தெரியும் வரை
இது போன்ற பயணங்கள் முடிவதில்லை!!!!

No comments: